To : my best friend thata ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😘😘😘
I wish weren’t sick ever .i can never stop thinking about you but I always see you in a form of a butterfly .your some one who is always
With me .I miss you more than anyone does.
I love you sooo much.you’re the sweetest and best person in the whole entire world. Thank you for all the help thata .you are the best person ever ❤️
I hope that you were watching me in my sports day thata. Did you know I was wearing your black hat when I was running? And I don,t think you know this thata but I went to a Hindu temple in London that is called Neasdon temple and I had so much fun🤩!!!
ஒரு தீபம் இன்னொரு தீபத்தை ஏற்றி வைத்தால் அந்த இடமே பிரகாசமாக இருக்கும் . அதேபோல தனக்கு தெரிந்த அனைத்தையும் எல்லோரிடமும் பகிர்ந்து கொண்டு உதவி செய்வார் அல்லது தெரியாதவர்களுக்கு ஆலோசனை சொல்லுவார். நாங்கள் லண்டன் நாட் களில் என்ன எடுத்து சென்றாலும் பல முறை மனதார நன்றி சொல்லுவார்.நான் எடுத்த புகைப்படங்களிற்கு குறைகள் இருந்தால் சுட்டி காட்டுவர் . . உங்களுடைய ஆத்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற இறைவனை பிராத்திக்கிறேன் .என்றும் அன்புடன் அன்ரி
Thata when you get better do you want to play football with me. I hope you goal when we play football. I love you, you’re sooo nice. I really want you to buy me necto. I want you to play with me forever. I love you from Aron thambi 🩶
It still does not feel real that you are not here with me . To the man that gave me everything love support and a steady hand . Keep watching over us Appa , your presence is felt in so many ways . Miss you dearly , you’ll always be in my heart.
Your Anto ❤️
எனக்கு அவர்சிவா அண்ணன்
பெயர்தனில் சிவந்தவன்
நிறத்திலும் சிவந்தவன்
குணத்திலும் சிறப்பவன்
நியாய்த்திற்கான கோபக்காரன்
கோபம் பாரட்டாதவன்
எதிரிகளுக்கும் நண்பன்
எதிராக யாருமில்லை’
அற்புதபாட்டுக்காரான்
நல்ல ரசனைக்கு சொந்தக்காரன்
சமூக அக்கறையதிகம்
தாய்மண்ணைநேசித்தவன்
நகைச்சுவை மன்னன்
நின்றால் இடம் சிறக்கும்
அறிவுசார் அணுகுபவன்
அறிவுரைகள் கூறுபவன்.
ஆலை வேலைகளில்
அளவளாவியது ஆயிரம்
அத்தனையும் அரசியல் சமூகம் பொருளாதாரம்
இடையிடை நகைச்சுவை
நீ ஒரு சரித்திரம்
அப்படி பேசுபவர்கள் யாருமில்லை
நாம் பேசிய இடங்களை
ஆலையில் பார்க்கையில்…
விழிகளும் உன்னைத்தேட
சிந்தையின் நினைவில்சோகம்
வகைகளும் ஏதும்முண்டோ
வையகம் மீண்டும் காண?
நினைவுகள் நிரந்தரமாய்
நான் நினைத்திருப்பேன் நாளும்
நாளை நான் நினைவாகமட்டும்.
-ஆத்மாசாந்தியடையவென்பிரார்த்தனைகள்.
நண்பன் தம்பி ஶ்ரீ
Castelnovo di sotto,Italy
Rest in peace, Periyappa.
This picture brings back a meaningful memory of our birthday party that you came to; you’re smiling and so full of happiness. Your presence always filled the room with laughter and joy. We will truly cherish all these moments forever.
I will always remember you as the man in the Mahesu family who commanded respect and authority through your silence.
But I also remember your playful jokes when we were younger.
You had the role of the eldest Maama, always there to guide and advise us whenever we needed you, and you fulfilled that role. ❤️
I have the best summer holiday memories with you all in Italy.
You always made sure we felt welcome and that everyone had eaten well.
I remember how you would always take us out, even if it was just for a short drive with Tamil songs playing in the car. There were 7 or 8 children squeezed into your car, but we were all so happy. ❤️
Our summer holidays at your house meant so much to us. They are some of the best childhood memories we have with our cousins, and that’s why we wanted to come back every year.
You will always be with us in our memories, Maama. We will miss you so much. ❤️
My dear Periappa ❤️, or better our big Appa because that’s what you are to us 💙❤️
I don’t think there can be life on this earth without your presence. That’s why I keep seeing you in every sunset with its beautiful colors that you paint for us, and I notice you in every shadow beside me for every step I take forward. Every person I meet carries a little of your beautiful smile and your warmth. I feel that you’re still here with us—not watching over us from afar, but standing beside us.
I miss you every day, and I miss the memories we can no longer create together. But I know, and I truly feel, that you are still with us when I close my eyes ❤️❤️❤️🩹💙
A little memory about this photo that I’ve always loved…
It must have been taken during one of our childhood trips to Italy 🫶🏽
I’ve always been so proud to show this picture, even during the slideshow at my wedding. First, because it’s a photo of you and me, but also because every single time people have exactly the same reaction: “Wow, who is that handsome man?” And I’ve always been so proud to answer, “That’s my maama! »
Ever since I was little, I’ve always seen you as such an elegant and charismatic man. 💗
We miss you so much, but you will remain in our hearts forever.
அழகன் முருகனே எங்கடை குடும்பத்தில் வந்தது போல மூத்த மருமகனாக வந்து சேர்ந்தீர்கள். 2003ம் அப்பா இறந்து வத்தளை வந்து இத்தாலி போகும் போது மாமி என்ன பிரச்சனை என்றாலும் தனிய என்று யோசிக்காதையுங்கள் அடுத்த Flight எடுத்து நாங்கள் இலங்கை வந்திடுவம் என்று சொன்னிர்கள் . நான் லண்டன் வந்து நின்ற நாட் கள் எல்லாம் அம்மம்மாவை கவனியுங்கோ எல்லாரரையும் கவனிக்க சொல்லி நீங்களும் நேர்த்திற்கு உணவு தந்து கவனித்து தேவையான எல்லாம் வாங்கி த்ந்து Airport வந்து வீட்டை கூட்டிக்கொண்டு வந்து பிறகு திரும்ப கவனமாக பயணம் அனுப்பி விட்டீர்களே ..உங்கள் ஆத்மா அமைதியாக இறைவன் பாதாரவிந்தங்களில் இளைப்பாறட்டும் .
பருவங்கள் வந்திடவே
திருமணக் கோலங்கண்டு
கணவன் மனைவி மக்களென
உடன் பிறந்த நம்
குடும்பங்கள் ஒன்றாய்
மகிழ்ந்திருந்த வேளையெல்லாம்
கண்ணீரை நிறைக்கிறதே
முதுமையும் மெல்ல
எட்டிப் பார்க்க
மக்கள் மருமக்கள்
வளர்ந்து வந்தே
கல்வியிலே
சிறந்தோங்கி நிற்பதைக்
கண்டே நீரும்
நெஞ்சம் குளிர்ந்திருந்தீர்
இனிய மக்கள் மருமக்கள்
மணக்கோலங்கள் கண்டே
மகிழ்ந்திருந்தீர்
சுட்டிப் பேர்ர் பேத்திகள்
எண்மரைப் பெற்ற
பெருமையும் பெற்றே
மனம் நிறைய வாழ்ந்திருந்தீர்
தாத்தாவாய் நிமிர்ந்து நின்றீர்
யாவரையும் அரவணைத்து உதவி
அன்பாகப் பேசிமகிழ்ந்த
உமது சிரித்த முகம்
காலத்துக்கும் பொறுக்கவில்லையோ
எங்கிருந்து வந்ததையா
கொடிய நோய்
விரைவாக உம்மை
யார் கூட்டிச் சென்றார்
எம் நெஞ்சங்கள் விம்ம
கோடைகாலச் செடிகள் போல
காய்ந்து கருகிவிட்டோம்
உமது பிரிவென்ற வெப்பம்
எமை எரிக்கிறதே
என்செய்வோம்
ஓ இறை என்ற இயற்கையைக்
கேட்கின்றோம்
எங்கு கொண்டு சென்றீரென
This something special I have to read out. This is all the memories me and you had together. So first let’s start when I was very young. This one I remember the most. So do you remember when you came and picked me up from school? Your black hat flew away from the wind and then I started to laugh. Also remember when you always change my nappy when I was small. That was my most favourite thing ever and that was so kind of you. Thank you so much for all of that. You are the best.
Next, this one I loved so much. So I hope you remember this, but remember you used to feed us always after school. Thank you for all this help, Thata. I appreciated all of this.
I really miss when you always say you sleep with me and you really want me to sleep with you in your house. I love you as much as anyone does.
Finally, I love when you give and ask if I want crisps or juice, and that is all.
I hope you get better and better and visit us all day every day.
inmemoryofsiva
Missing you
Sivvy
Always in my heart ❤️ Love you Dad
Aatithi
To : my best friend thata ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😘😘😘
I wish weren’t sick ever .i can never stop thinking about you but I always see you in a form of a butterfly .your some one who is always
With me .I miss you more than anyone does.
I love you sooo much.you’re the sweetest and best person in the whole entire world. Thank you for all the help thata .you are the best person ever ❤️
I hope that you were watching me in my sports day thata. Did you know I was wearing your black hat when I was running? And I don,t think you know this thata but I went to a Hindu temple in London that is called Neasdon temple and I had so much fun🤩!!!
Love from: your kannamma 🫂
Tharmarajah
I miss you my dear brother, may your soul rest in peace🙏
Rajani Sivarajah
ஒரு தீபம் இன்னொரு தீபத்தை ஏற்றி வைத்தால் அந்த இடமே பிரகாசமாக இருக்கும் . அதேபோல தனக்கு தெரிந்த அனைத்தையும் எல்லோரிடமும் பகிர்ந்து கொண்டு உதவி செய்வார் அல்லது தெரியாதவர்களுக்கு ஆலோசனை சொல்லுவார். நாங்கள் லண்டன் நாட் களில் என்ன எடுத்து சென்றாலும் பல முறை மனதார நன்றி சொல்லுவார்.நான் எடுத்த புகைப்படங்களிற்கு குறைகள் இருந்தால் சுட்டி காட்டுவர் . . உங்களுடைய ஆத்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற இறைவனை பிராத்திக்கிறேன் .என்றும் அன்புடன் அன்ரி
Sisi
Miss and love you so much periappa❤️💐
Saru
Your love still surrounds me, your lessons still lead me, and our memories will always be a part of me every day. I miss you always, Appa ❤️
Aron
Thata when you get better do you want to play football with me. I hope you goal when we play football. I love you, you’re sooo nice. I really want you to buy me necto. I want you to play with me forever. I love you from Aron thambi 🩶
Santosha
It still does not feel real that you are not here with me . To the man that gave me everything love support and a steady hand . Keep watching over us Appa , your presence is felt in so many ways . Miss you dearly , you’ll always be in my heart.
Your Anto ❤️
Sri ( Castelnovo di sotto,Italy )
எனக்கு அவர்சிவா அண்ணன்
பெயர்தனில் சிவந்தவன்
நிறத்திலும் சிவந்தவன்
குணத்திலும் சிறப்பவன்
நியாய்த்திற்கான கோபக்காரன்
கோபம் பாரட்டாதவன்
எதிரிகளுக்கும் நண்பன்
எதிராக யாருமில்லை’
அற்புதபாட்டுக்காரான்
நல்ல ரசனைக்கு சொந்தக்காரன்
சமூக அக்கறையதிகம்
தாய்மண்ணைநேசித்தவன்
நகைச்சுவை மன்னன்
நின்றால் இடம் சிறக்கும்
அறிவுசார் அணுகுபவன்
அறிவுரைகள் கூறுபவன்.
ஆலை வேலைகளில்
அளவளாவியது ஆயிரம்
அத்தனையும் அரசியல் சமூகம் பொருளாதாரம்
இடையிடை நகைச்சுவை
நீ ஒரு சரித்திரம்
அப்படி பேசுபவர்கள் யாருமில்லை
நாம் பேசிய இடங்களை
ஆலையில் பார்க்கையில்…
விழிகளும் உன்னைத்தேட
சிந்தையின் நினைவில்சோகம்
வகைகளும் ஏதும்முண்டோ
வையகம் மீண்டும் காண?
நினைவுகள் நிரந்தரமாய்
நான் நினைத்திருப்பேன் நாளும்
நாளை நான் நினைவாகமட்டும்.
-ஆத்மாசாந்தியடையவென்பிரார்த்தனைகள்.
நண்பன் தம்பி ஶ்ரீ
Castelnovo di sotto,Italy
Kutty Chithappa Family
Rest in peace, Periyappa.
This picture brings back a meaningful memory of our birthday party that you came to; you’re smiling and so full of happiness. Your presence always filled the room with laughter and joy. We will truly cherish all these moments forever.
BALA
பத்து ஆண்டுகளுக்கு முன்பு,
நீங்கள் என் வாழ்க்கையில்
என் மாமனாராக வந்தீர்கள்.
ஆனால் வாழ்க்கைப் பயணத்தின் ஏதோ ஒரு கட்டத்தில்,
“மாமனார்” என்ற அந்த வார்த்தை
மெல்ல மெல்ல மறைந்துவிட்டது.
நீங்கள் என் நண்பராக மாறிவிட்டீர்கள்.
பிறந்தநாள் கேக்குகள்,
தோட்ட விருந்துகள்,
கோடை கால பார்பிக்யூ கொண்டாட்டங்கள்,
குடும்ப சுற்றுலாப் பயணங்கள்…
ஒவ்வொரு சந்திப்பிலும்
சிரிப்புகள் இருந்தன…
பகிர்ந்து கொள்ள புதிய கதைகள் இருந்தன…
ஒன்றாக உயர்த்திய கண்ணாடிக் கோப்பைகளும் இருந்தன.
இந்தப் புகைப்படத்தில்
நாங்கள் வெறும் பானங்களை மட்டும் கையில் ஏந்தவில்லை.
எங்கள் வாழ்நாளின் அழியாத நினைவுகளை ஏந்தியிருக்கிறோம்.
பணத்தால் வாங்க முடியாத நினைவுகள்…
மீண்டும் உருவாக்க முடியாத தருணங்கள்…
எதனாலும் மாற்ற முடியாத உறவுகள்…
வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்று
நீங்கள் ஒருபோதும் நீண்ட அறிவுரைகள் சொல்ல வேண்டியதில்லை.
நான் உங்களைப் பார்த்தே கற்றுக்கொண்டேன்…
உங்கள் அன்பை…
உங்கள் பொறுமையை…
எந்தக் கூட்டத்தையும் ஒளிரச் செய்யும் உங்கள் புன்னகையை…
உங்களைச் சுற்றியிருந்த அனைவரையும்
உறவாக உணர வைத்த உங்கள் பண்பை…
வாழ்க்கை கடினமாக இருந்த ஒவ்வொரு நேரத்திலும்,
“நாளை இன்னொரு வாய்ப்பு தரும்…”
என்று உங்கள் வாழ்க்கையே எனக்குக் கற்றுக் கொடுத்தது.
நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு மட்டும்
ஒரு தந்தையாக இருக்கவில்லை.
எனக்கும் ஒரு தந்தையாகவே இருந்தீர்கள்.
இன்று…
நீங்கள் ஒருமுறை,
“வா… தோட்டத்தில் கொஞ்சம் உட்காரலாம்…”
அல்லது,
“வா… ஒரு கிளாஸ் சேர்ந்து குடிப்போம்…”
என்று சொல்வதைக் கேட்க,
என்னிடம் உள்ள எதையும் கொடுக்கத் தயார்.
இன்னும் ஒரு பார்பிக்யூ…
இன்னும் ஒரு குடும்பச் சுற்றுலா…
இன்னும் ஒரு மனமார்ந்த சிரிப்பு…
இன்னும் ஒரு புகைப்படம் மட்டும்…
ஆனால் இன்று…
இந்தப் புகைப்படம்
விலை மதிப்பற்ற பொக்கிஷமாகிவிட்டது.
ஒரு காலத்தில்
என் அருகில் நின்று…
கையில் ஒரு கண்ணாடிக் கோப்பையுடன்…
முகம் நிறைந்த புன்னகையுடன்…
அன்றைய சாதாரண நாளே
ஒருநாள் இவ்வளவு அருமையான நினைவாக மாறும் என்று
நாமிருவரும் அறியாமல் இருந்த தருணத்தை
இது தினமும் நினைவூட்டுகிறது.
இன்று நீங்கள் எங்களுடன் அமரவில்லை என்றாலும்,
ஒவ்வொரு குடும்பச் சந்திப்பிலும்…
ஒவ்வொரு பிறந்தநாள் மெழுகுவர்த்தியிலும்…
ஒவ்வொரு கோடை மாலை நேரத்திலும்…
ஒவ்வொரு வாழ்த்து கண்ணாடி உயர்த்தும் தருணத்திலும்…
உங்களுக்கான இடம் என்றும் காலியாக காத்திருக்கும்.
ஏனெனில்…
மகத்தான மனிதர்கள் ஒருபோதும் மறைந்து போவதில்லை.
அவர்கள்…
தங்களை உண்மையாக நேசித்தவர்களின்
இதயங்களில் என்றென்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார்கள். ❤️
“அப்பா… நீங்கள் என் மனைவியின் தந்தை மட்டுமல்ல…
என் வாழ்க்கையின் வழிகாட்டி, என் நண்பர், என் இரண்டாவது தந்தை.”
Amsha
Maama,
I will always remember you as the man in the Mahesu family who commanded respect and authority through your silence.
But I also remember your playful jokes when we were younger.
You had the role of the eldest Maama, always there to guide and advise us whenever we needed you, and you fulfilled that role. ❤️
I have the best summer holiday memories with you all in Italy.
You always made sure we felt welcome and that everyone had eaten well.
I remember how you would always take us out, even if it was just for a short drive with Tamil songs playing in the car. There were 7 or 8 children squeezed into your car, but we were all so happy. ❤️
Our summer holidays at your house meant so much to us. They are some of the best childhood memories we have with our cousins, and that’s why we wanted to come back every year.
You will always be with us in our memories, Maama. We will miss you so much. ❤️
Amsha
Chiara Mahesu
My dear Periappa ❤️, or better our big Appa because that’s what you are to us 💙❤️
I don’t think there can be life on this earth without your presence. That’s why I keep seeing you in every sunset with its beautiful colors that you paint for us, and I notice you in every shadow beside me for every step I take forward. Every person I meet carries a little of your beautiful smile and your warmth. I feel that you’re still here with us—not watching over us from afar, but standing beside us.
I miss you every day, and I miss the memories we can no longer create together. But I know, and I truly feel, that you are still with us when I close my eyes ❤️❤️❤️🩹💙
Ovi
Dear Maama,
A little memory about this photo that I’ve always loved…
It must have been taken during one of our childhood trips to Italy 🫶🏽
I’ve always been so proud to show this picture, even during the slideshow at my wedding. First, because it’s a photo of you and me, but also because every single time people have exactly the same reaction: “Wow, who is that handsome man?” And I’ve always been so proud to answer, “That’s my maama! »
Ever since I was little, I’ve always seen you as such an elegant and charismatic man. 💗
We miss you so much, but you will remain in our hearts forever.
We’re always thinking of you. 💗
Love,
Ovi
Bala
Ten years ago…
You came into my life as my father-in-law.
But somewhere along life’s journey, the title “father-in-law” quietly disappeared.
You became my friend.
Birthday celebrations…
Garden parties…
Summer barbecues…
Family holidays…
Every gathering was filled with laughter.
There were always new stories to share…
New memories to create…
And glasses raised to celebrate life together.
In this photograph, we weren’t simply holding drinks.
We were holding moments that would one day become priceless memories.
Memories that money could never buy.
Moments that could never be recreated.
A bond that nothing could ever replace.
You never had to give long speeches about how to live life.
I learned simply by watching you.
Your kindness…
Your patience…
Your smile that could brighten any room…
And your remarkable gift of making everyone around you feel like family.
Whenever life became difficult, your life itself taught me one simple lesson:
“Tomorrow always brings another chance.”
You were not only a wonderful father to your children.
You became a father to me as well.
Today…
I would give anything to hear you say just one more time,
“Come on… let’s sit in the garden for a while.”
Or,
“Come on… let’s have a drink together.”
Just one more barbecue…
One more family holiday…
One more heartfelt laugh…
One more photograph…
That’s all I would ask for.
Today, this picture has become one of my greatest treasures.
It reminds me of a day when you stood beside me…
A glass in your hand…
A smile across your face…
Neither of us knowing that what felt like such an ordinary day would one day become one of the most precious memories of my life.
Although you are no longer here to sit beside us,
At every family gathering…
Every birthday candle…
Every summer evening…
And every toast we raise…
There will always be a place waiting for you.
Because truly great people never really leave us.
They continue to live on…
In the hearts of those who loved them most.
Dad…
You were never just my wife’s father.
You were my mentor…
My friend…
My second father…
And you always will be. ❤️
Maami (Rani Vamathevan)
அழகன் முருகனே எங்கடை குடும்பத்தில் வந்தது போல மூத்த மருமகனாக வந்து சேர்ந்தீர்கள். 2003ம் அப்பா இறந்து வத்தளை வந்து இத்தாலி போகும் போது மாமி என்ன பிரச்சனை என்றாலும் தனிய என்று யோசிக்காதையுங்கள் அடுத்த Flight எடுத்து நாங்கள் இலங்கை வந்திடுவம் என்று சொன்னிர்கள் . நான் லண்டன் வந்து நின்ற நாட் கள் எல்லாம் அம்மம்மாவை கவனியுங்கோ எல்லாரரையும் கவனிக்க சொல்லி நீங்களும் நேர்த்திற்கு உணவு தந்து கவனித்து தேவையான எல்லாம் வாங்கி த்ந்து Airport வந்து வீட்டை கூட்டிக்கொண்டு வந்து பிறகு திரும்ப கவனமாக பயணம் அனுப்பி விட்டீர்களே ..உங்கள் ஆத்மா அமைதியாக இறைவன் பாதாரவிந்தங்களில் இளைப்பாறட்டும் .
அன்புடன் மாமி ( இராணி )
ராணி மாமி
எங்கள் ஆசை அப்பாவே
வசந்த காலத்தின்
வண்ணத்துப் பூச்சிகளாய்
சிறகடித்துப் பறந்தோம்
ஒரு காலம்
பட்டுப் பூவே
எனக் கட்டியணைத்து
முத்தமிட்டீர்
மெல்ல நடைபழக்கி
பூமியின் அழகையெல்லாம்
கூட்டிக் காட்டி வந்தீர்
ஏடெடுத்துப்
பள்ளிசென்று
நாம் கல்வியிலே
உயரவைத்தீர்
நெஞ்சில்
மெல்ல மெல்ல
வந்து மோதுதே
அப்பா
அந்த இனிய பொழுதெல்லாம்
பெண்களாய்ப் பிறந்த
எங்கள் மூவரையும்
தங்கக் கிளிகளாய்க்
காத்து வளர்த்தீர்
நோக ஒரு வார்த்தை
சொன்னதில்லை
அப்பா நீங்கள்
கேட்ட ஒன்றை
மறுத்ததுமில்லை
பருவங்கள் கண்டே
திருமணமும்
செய்து வைத்தீர்
பேரன் பேத்தியின்
அணைப்பென்ற
சொர்க்கத்தில்
நீந்தித் திளைத்தீர்
அருமையான
மனையாளுடன்
வாழ்வை வசந்தமாக்கினீர்
அன்பான
பெற்றோரை
அரவணைத்து மகிழ்ந்தீர்
பாசமான
உடன் பிறப்புகளுடன்
பாடிப் பறந்து திரிந்தீர்
மனைவி மக்கள்
மருமக்கள் பேர்ர்
பெறாமக்களென
உறவெல்லாம் இனிக்க
கட்டியணைத்து
மகிழ்ந்திருந்தீர்
இனிய நட்புகள்
என்றும் சூழ்ந்திருக்க
சுகமான வாழ்வும்
கண்டீர்
இனி வேறென்ன
வேண்டும் எனக்கு என்றே
நெஞ்சம் நிறைந்து
வாழ்ந்திருந்தீர்
நிறைவான
வாழ்வு கண்ட
எங்கள்
ஆசை அப்பாவே
உங்கள் வாழ்வை
நிறைக்க ஒரு
கொடிய நோய்
வேகமாய் ஓடிவரும்
என்றே நாம்
எண்ணியிருக்கவில்லை
அமைதியாய் வாழ்ந்தீர்
நோயையும் வென்றீர்
சுகமாகச் சென்றுவிட்டீர்
அப்பா நீங்கள்
காட்டிய பாதையில்
நாங்கள்
நடக்கத் தொடங்கிவிட்டோம்
உங்கள் நினைவுகள்
எங்களை வாழவைக்கும்
போய்வாருங்கள்
எங்கள் ஆசை அப்பாவே
நாம் இனிக் கலங்கமாட்டோம்
அன்பு மகள்கள்
சந்தோ சாரு. சிவானி
Pathmarani (Rani)
கண்ணீரில் எமை நிறைத்து
அழகாகச் சிரிக்கின்றீர்
உடன் பிறந்த
நால்வர் நாம்
உம்மோடு ஐவராய்
ஒரு கொடியில் பூத்திருந்தோம்
ஊரெல்லாம் சுற்றிவந்தோம்
பள்ளிசென்று பாடம் படித்தோம்
கோவில்குளம் யாவும் கண்டோம்
ஓடி ஆடி விளையாடி
ஒன்றாய் உட்கார்ந்து
உண்டிருந்த நாட்கள் எல்லாம்
கனவாகிப் போனதுவே
நெஞ்சந்தான் வலிக்கிறதே
எண்ணெய் தேய்க்க
ஓடி ஒளித்து
தலையில் குளிக்க
அழுது குளறி
அம்மா பிடித்திருக்க
அப்பா தண்ணீர் ஊற்ற
துள்ளிக் குதித்த
பொழுதுகள் எல்லாம்
படமெடுத்து வருகிறதே
பொங்கலுக்கு அடுப்புப் பிடித்து
முற்றம் திருத்தி கோலம் போட்டு
வெடி கொழுத்தி பொங்கலிட்டு
மகிழ்ந்திருந்த காலமெல்லாம்
ஓடி வந்து நிற்கிறதே
தீபாவளி வருடப்பிறப்பென
புத்தாடை அணிந்து
பெருமையாய் நடைபோட்டோம்
உறவுகள் தேடிவர
பலகாரம் பல உண்டு
மனங்குளிரச் சிரித்திருந்தோம்
ஒரு கூட்டுக் கிளிகளாய்
இனிதாக களித்திருந்த
அந்த வசந்தங்கள்
கனவாக கரைந்து
விரைவாகப் போனதையா
சின்னச் சின்னக் குழப்படிகள்
சிலநேரம் செய்துவிட்டு
அப்பாவிடம் தப்பியதும்
அடிவாங்க நேர்ந்ததுவும்
நினைவினிலே வருகிறதே
கண்களை நனைக்கிறதே
பருவங்கள் வந்திடவே
திருமணக் கோலங்கண்டு
கணவன் மனைவி மக்களென
உடன் பிறந்த நம்
குடும்பங்கள் ஒன்றாய்
மகிழ்ந்திருந்த வேளையெல்லாம்
கண்ணீரை நிறைக்கிறதே
முதுமையும் மெல்ல
எட்டிப் பார்க்க
மக்கள் மருமக்கள்
வளர்ந்து வந்தே
கல்வியிலே
சிறந்தோங்கி நிற்பதைக்
கண்டே நீரும்
நெஞ்சம் குளிர்ந்திருந்தீர்
இனிய மக்கள் மருமக்கள்
மணக்கோலங்கள் கண்டே
மகிழ்ந்திருந்தீர்
சுட்டிப் பேர்ர் பேத்திகள்
எண்மரைப் பெற்ற
பெருமையும் பெற்றே
மனம் நிறைய வாழ்ந்திருந்தீர்
தாத்தாவாய் நிமிர்ந்து நின்றீர்
யாவரையும் அரவணைத்து உதவி
அன்பாகப் பேசிமகிழ்ந்த
உமது சிரித்த முகம்
காலத்துக்கும் பொறுக்கவில்லையோ
எங்கிருந்து வந்ததையா
கொடிய நோய்
விரைவாக உம்மை
யார் கூட்டிச் சென்றார்
எம் நெஞ்சங்கள் விம்ம
கோடைகாலச் செடிகள் போல
காய்ந்து கருகிவிட்டோம்
உமது பிரிவென்ற வெப்பம்
எமை எரிக்கிறதே
என்செய்வோம்
ஓ இறை என்ற இயற்கையைக்
கேட்கின்றோம்
எங்கு கொண்டு சென்றீரென
நாலுபேர் போற்ற
நல்லவராய் வாழ்ந்தீர்
போதுமென்ற நிறைவில்
போய்விடத் துணிந்தீர்
கண்ணீரில் எமை நிறைத்து
அழகாகச் சிரிக்கின்றீர்
உமது இனிய நினைவுகள் ஒன்றே
எம் நெஞ்சைத் தாலாட்டும்
அந்த நினைவுகளுடனேயே
நாம் என்றும் வாழ்ந்திருப்போம்
உமது அன்பு உடன் பிறப்புகள்
ராணி இளங்கோவன்
தர்மராஜா மகேசு
சுந்தர்ராஜா மகேசு
தனா சூரியபாலன்
Aatithi Aron
To Thata,
This something special I have to read out. This is all the memories me and you had together. So first let’s start when I was very young. This one I remember the most. So do you remember when you came and picked me up from school? Your black hat flew away from the wind and then I started to laugh. Also remember when you always change my nappy when I was small. That was my most favourite thing ever and that was so kind of you. Thank you so much for all of that. You are the best.
Next, this one I loved so much. So I hope you remember this, but remember you used to feed us always after school. Thank you for all this help, Thata. I appreciated all of this.
I really miss when you always say you sleep with me and you really want me to sleep with you in your house. I love you as much as anyone does.
Finally, I love when you give and ask if I want crisps or juice, and that is all.
I hope you get better and better and visit us all day every day.
Aatithi and Aron